சொல் பொருள்
1. (வி) 1. அடங்கு, ஒடுங்கு, 2. பணி, 3. ஓய் 4. அற்றுப்போ, அழி, 5. அணைந்துபோ, 6. அடக்கு, 7. அழி, கெடு, 8. இல்லாமற்செய்,
2. (பெ) 1. வேள்வித்தீயில் தேவர்க்குப் படைக்கும் உணவு, 2. வேகவைத்தது,
சொல் பொருள் விளக்கம்
1. அடங்கு, ஒடுங்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
become subdued, bow, be humble, cease, desist from action, perish, cease to exist, become extinguished, suppress, repress, subdue, destroy, make extinct, offerings made to god in sacrificial fire, food that is boiled
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 629 ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல் போல பாம்பு பை அவிந்தது போல கூம்பி – குறு 185/5 பாம்பின் படம் ஒடுங்கியதைப் போல் குவிந்து ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை – புறம் 191/6 நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டுமிடத்துப் பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டையுடைய இரவு அரிவாரின் தொண்டக_சிறுபறை பானாள் யாமத்தும் கறங்கும் யாமம் காவலர் அவியா மாறே – குறு 375/4-6 இரவில் கதிரறுப்பாரைப் போன்று தொண்டகச் சிறுபறை நள்ளிரவான நடுச்சாமத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கும் – இரவுக்காவலர் ஓய்ந்துபோகாமலிருக்கும்பொருட்டு நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1 நிழல் அடங்கி அற்றுப்போன நீர் அற்ற கடக்கமுடியாத பாலை வெளியில் ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் – பரி 8/98 வழியில் வீசுகின்ற காற்றால் அணைந்துபோகாத விளக்குகளும், தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி கல்லென் சுற்றம் கடும் குரல் அவித்து – குறி 150,151 பாகன்)அங்குசம் அழுத்திய ஆண்யானை போல எழுச்சியுண்டாகக் கைகளை உயர்த்தி, கல்லென்னும் ஓசைபடக் கத்தும் நாய்களின் கடுமையான குரல்களை அடக்கி காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது அரி கால் அவித்து – பதி 30/14,15 பருவமல்லாத காலத்திலும் கரும்பினை அறுத்து மாளாது, கரும்பின் வேர்க்கட்டைகளை அழித்து சிறுகுடி குறவன் பெரும் தோள் குறு_மகள் நீர் ஓர் அன்ன சாயல் தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/3-5 சிறுகுடியில் இருக்கும் குறவனின் பெரிய தோள்களையுடைய இளையவளின் நீரின் தன்மை போன்ற மெல்லிய தன்மை தீயைப் போன்ற என் வலிமையை அழித்தது வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே – அகம் 70/15-17 வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற்பொருட்டாகப் பறவைகளின் ஒலி இல்லையாகச் செய்த பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல ஒலி அடங்கப் பெற்றது இந்த ஆரவாரமுடைய ஊர் அவி உணவினோர் புறம்காப்ப – புறம் 377/5 அவியாகிய உணவை உண்ணும் தேவர்கள் புறத்தேநின்று பாதுகாக்க உப்பு இலாஅ அவி புழுக்கல் கைக்கொண்டு பிறக்கு நோக்காது இழிபிறப்பினோன் ஈயப்பெற்று – புறம் 363/12-14 உப்பின்றி வேகவைத்த சோற்றைக் கையிற்கொண்டு பின்புறம் பாராது இழிசினனாகிய புலையன் கொடுக்கப்பெற்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்