சொல் பொருள்
(பெ) நெல் முதலியவற்றைக் குற்றுதல்,
சொல் பொருள் விளக்கம்
நெல் முதலியவற்றைக் குற்றுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pounding, thumping in a mortar;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 193,194 கரிய வயிரத்தையுடைய உலக்கையின் பூணினையுடைய முகத்தைத் தேயப்பண்ணின குற்றுதல் நன்கமைந்த அரிசி(யாலாக்கின) உருண்டையாக்கிய வெண்மையான சோற்றை இதை புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு – அகம் 394/3 புதுக்கொல்லையில் விளைந்த வரகினது குத்துதல் மாட்சிமைப்பட்ட அரிசியுடன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்