சொல் பொருள்
(பெ) ஒரு வகைப் பலா
ஆசினி என்பது ஒரு மரம்; ஈரப்பலா என்பாரும் உளர். (புறம் 158. ப. 2)
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகைப் பலா
இது ஈரப்பலா என்றும் அழைக்கப்படும். இதன் மரம் நீண்டு உயர்ந்தது என்று கூறுகின்றன மலைபடுகடாமும், அகநானூறும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Bread-fruit tree, Artocarpus incisa
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 139 நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12 இதனுடைய காய் குடம்போன்று இருக்கும் என்கிறது நற்றிணை. குடக் காய் ஆசினி படப்பை – நற் 44/9 குடம்போன்ற காயையுடைய ஆசினிப்பலாவையுடைய தோட்டத்தில் இதனுடைய பழம் மென்மையாக இருக்கும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12 ஆசினிப்பலாவின் மெல்லிய பழங்களில் நெகிழ்ந்தவற்றை உதிர்த்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்