சொல் பொருள்
ஆண்டான் என்பது உயிர்களை எல்லாம் ஆளுந்தன்மையை உடைய கடவுளைக் குறிக்கின்றது
சொல் பொருள் விளக்கம்
ஆண்டான் என்னும் மொழி ஆள் என்னும் பகுதி அடியாகப் பிறந்த இறந்தகால வினையாலணையும் பெயர். ஆள் என்பது ஆண்மை என்னும் பண்புப் பெயரடியாகப் பிறந்த வினை. ஆண்மை என்பது ஆளுந்தன்மை என்று பொருள்படும். ஆண்டான் என்பது உயிர்களை எல்லாம் ஆளுந்தன்மையை உடைய கடவுளைக் குறிக்கின்றது. உயிர்களை எல்லாம் ஆளும் தன்மை உடையவன் ஆதலின் அவன் முழுமுதற் கடவுள் எனப்படுவான். முற்றறிவுடைமை முதலிய எண் குணங்களும் உயிர்களை ஆளும் தன்மைக்கு அவனுக்கு வேண்டப்படுவனவாகும்.
(செந்தமிழ்ச் செல்வி. 2: 127.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்