சொல் பொருள்
(பெ) 1. பசு, 2. எருமை போன்ற மாடுவகை இனங்களில் பெண், 3 காளை, எருது போன்ற ஆண் இனம்
சொல் பொருள் விளக்கம்
(பசு) ஆ என்பது மா என்பதன் மெய் நீக்கம். மா என்று கத்துவது ‘மா’ எனப்பட்டது. மா – மான்- மாடு. மா என்பது னகர மெய்யீறு பெற்று ஆவிற்கு இனமான மானை உணர்த்திற்று. ஆ என்பது மாடு என்பதுபோல முதலாவது பொதுப் பெயராய் இருந்து, பின்பு பெண்பாலுக்கு வரையறுக்கப்பட்டது. முதலாவது வளர்க்கப்பட்ட விலங்கு மா (ஆ) ஆதலின் அதன் பெயர் விலங்கினத்திற்கெல்லாம் பொதுப் பெயராயிற்று. ஆ என்பது னகர ஈறு பெற்று ஆன் என்றாயிற்று. (ஒப்பியன் மொழிநூல். 193.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cow, female buffalo, bull
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன் கணம், கன்று பயிர் குரல – குறி 217 பசுக்கூட்டம் தம் கன்றுகளை அழைத்து ஒலிக்க திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் – குறு 279/1 முறுக்கிய கொம்புகளையுடைய எருமையின் இருண்ட நிறமுள்ள காரெருமை வேனில் ஆன் ஏறு போல – குறு 74/4 வேனில்காலத்துக் காளை போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்