சொல் பொருள்
(பெ) 1. ஒருவரைச் சேர்ந்த கூட்டத்தார், 2. தோழியர் கூட்டம், 3. (விலங்கினங்களின்)தொகுதி
சொல் பொருள் விளக்கம்
1. ஒருவரைச் சேர்ந்த கூட்டத்தார்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fraternity
female companions
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செல்வ, சேறும் எம் தொல்பதிப் பெயர்ந்து என மெல்லெனக் கிளந்தனமாக, வல்லே அகறிரோ எம் ஆயம் விட்டு என சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 121 – 124 மன்னனே! யாங்கள் எம் பழைய ஊருக்குச் செல்வோம் என்று மெல்லச் சொன்னபோது, விரைந்து போகின்றீரோ எம் கூட்டத்தாரைவிட்டு என்று வெகுண்டவனைப் போன்று எம்மை வருத்தும் பார்வையுடனே மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/1,2 விரிந்த பொய்கையிலுள்ள பூக்களைக் கொய்துவந்த சோர்வினால் வருந்திய தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9 ஒலிக்கின்ற மணிகள் கட்டிய கழுத்தையுடைய பால்தரும் பசுக்களாகிய கூட்டம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்