Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஒருவரைச் சேர்ந்த கூட்டத்தார், 2. தோழியர் கூட்டம், 3. (விலங்கினங்களின்)தொகுதி

சொல் பொருள் விளக்கம்

1. ஒருவரைச் சேர்ந்த கூட்டத்தார்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fraternity

female companions

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செல்வ, சேறும் எம் தொல்பதிப் பெயர்ந்து என
மெல்லெனக் கிளந்தனமாக, வல்லே
அகறிரோ எம் ஆயம் விட்டு என
சிரறியவன்போல் செயிர்த்த நோக்கமொடு – பொரு 121 – 124

மன்னனே! யாங்கள் எம் பழைய ஊருக்குச் செல்வோம் என்று
மெல்லச் சொன்னபோது, விரைந்து
போகின்றீரோ எம் கூட்டத்தாரைவிட்டு என்று
வெகுண்டவனைப் போன்று எம்மை வருத்தும் பார்வையுடனே

மலர்ந்த பொய்கைப் பூக்குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/1,2

விரிந்த பொய்கையிலுள்ள பூக்களைக் கொய்துவந்த சோர்வினால்
வருந்திய தோழியர் கூட்டம் இனிதாகக் கண்ணுறங்க

படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9

ஒலிக்கின்ற மணிகள் கட்டிய கழுத்தையுடைய பால்தரும் பசுக்களாகிய கூட்டம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *