சொல் பொருள்

கேழ்வரகுக் கதிர் ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். ‘ஆரியம்’ என்னும் மொழிப் பெயர் பொதுவழக்கு.

சொல் பொருள் விளக்கம்

கையின் விரல்களை மடிப்பதைப் பூட்டிய கை என்பர். கேழ்வரகின் கதிர் கையைப் பூட்டிய அமைப்பில் இருத்தலால் பூட்டை எனப்படும். பூட்டையாவது கட்டமைப்புடைய கதிர். ஆர் என்பதன் பொருள்களுள் ஒன்று, கட்டு என்பது. ‘ஆர்த்த பேரன்பு’ ‘ஆர்த்த சபை’ என்பவற்றில் வரும் ஆர்த்தல் அப்பொருளது. ஆதலால் கட்டமைந்த கேழ்வரகுக் கதிர் ஆரியம் (ஆர் இயம்) எனப்பட்டதாகலாம். சேலம் தருமபுரிப் பகுதி வழக்கு இது. ‘ஆரியம்’ என்னும் மொழிப் பெயர் பொதுவழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.