சொல் பொருள்

(பெ) 1. வெள்ளம், 2. கடல், 3. மிகுந்த ஆரவாரம் (ஆர்+கலி)

சொல் பொருள் விளக்கம்

1. வெள்ளம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

floods, sea, loud noise

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3

பொய்க்காத மேகங்கள் புதிய மழையைப் பெய்ததாக
வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலையுடைய இடையர்கள்

இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/19

கருமையான கழியின் வழியாக வந்திறங்கும் கடல் ஓடங்கள்

தீம்பெயல், காரும் ஆர்கலி தலையின்று – அகம் 54/3

இனிய மழையை, மேகமும் மிக்க ஒலியுடன் பெய்தது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.