சொல் பொருள்
ஆற்றில் நீராடி இன்புறுதல்
சொல் பொருள் விளக்கம்
ஆற்றிலும் கடலிலும் நீராடி இன்புறுவதும் பண்டை நாளைய செல்வ வேந்தர் வழக்கமாகும்.
“யாறும் குளனும் காவும் ஆடிப்பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப” என்பதனால் (தொல். பொருள்.கற்பு. 50)
இது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே வரும் வழக்காறு என்பது தெளிவாம். ஆறாடி மகிழும் திறத்தை இப்போதும் கேரள நாட்டார் ஆறாட்டு என வழங்குகின்றனர். நார்முடிச் சேரல் சேர நாட்டில் அரசு புரிந்த காலத்தில் நிகழ்ந்த ஆறாட்டு ஒன்றைக் காப்பியனார் கண்டு வியந்து பாடியுள்ளார். (காப்பியனார்- காப்பியாற்றுக் காப்பியனார்) (சேரமன்னர் வரலாறு. 147.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்