சொல் பொருள்
ஆலைச்சரக்கு – அரும் பொருள்
சொல் பொருள் விளக்கம்
ஆலை, தொழிற்சாலை ; கலைநலமும் கவினும் அமைந்தது ஆலைப்பொருள். அப்பொருட்கவர்ச்சியால் விலையாகும் தன்மையது. ஆலைச்சரக்கு முன்னாளில் சீமையில் இருந்து இறக்குமசதி செய்யப்பட்டமையால் சீமைச் சரக்கு எனவும் படும். சீமை எண்ணெய் என மண்ணெண்ணெய் குறிக்கப்படுதலும் அறியத்தக்கது. சிலர் தங்கள் பொருளை உயர்ததியும் விலையைக் கூட்டியும் சொன்னால் “ஆமாம் ; ஆலைச்சரக்கு ; இந்த விலை சொல்ல வேண்டியதுதான்” என்று ஒதுக்குவர். ஆலைச் சரக்கு என்பதற்குக் கிடைத்தற்கரிய அரும் பொருள் என்பது பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்