சொல் பொருள்
(பெ) முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்று, பழனி,
சித்தன் வாழ்வென்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றது.
சொல் பொருள் விளக்கம்
முருகனின் அறுபடைவீடுகளுள் ஒன்று, பழனி,
இது பொதினி என்றும் அழைக்கப்படும். ஆவி என்பானின் தலைநகரம் பொதினி. ஆவி நன் குடி என்பதுவே ஆவிநன்குடி என்றாகிப் பின்னர் ஆவினன்குடி என்றானது என்பர்.
சித்தன் வாழ்வென்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றது. (முருகு. 175 – 6. நச்)
பார்க்க – ஆவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The city of Pazhani
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆவினன்குடி அசைதலும் உரியன் – திரு 176 திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்