Skip to content
ஆவிரை

ஆவிரை, ஆவாரை, ஆவாரம் எனப் பலவாறாக அழைக்கப்படும் செடி/அதன் பூ

1. சொல் பொருள்

(பெ) ஆவாரம் செடி/அதன் பூ

2. சொல் பொருள் விளக்கம்

ஆவிரை, ஆவாரை, ஆவாரம், துவகை, மேகாரி எனப் பலவாறாக அழைக்கப்படும் செடி/அதன் பூ. ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.

தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும்போது ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ – என வரும் என்கிறார்

மொழிபெயர்ப்புகள்

matura tea treeavaram or ranawara , (Kannada: ಆವರಿಕೆ āvarike, Marathi: तरवड, Malayalam: ആവര, Sinhala: රණවරා ranawarā,Telugu: తంగేడు taṃgēḍu, Tamil: ஆவாரை āvārai) or the English version avaram senna. It is the State flower of Telangana.

3. ஆங்கிலம்

Tanner’s senna, Cassia auriculata, Senna auriculata ;

ஆவாரை
ஆவாரை

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1

பொன் போன்ற ஆவிரையின் புது மலர் சேர்ந்த

பனையும் அரையும் ஆவிரை கிளவியும் - எழுத். உயி.மயங்:81/1

விரி மலர் ஆவிரை வேரல் சூரல் - குறி 71

பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த - குறு 173/1
துவகை
துவகை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலி 138/9

பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18

அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8

களரி ஆவிரை கிளர் பூ கோதை - அகம் 301/14
ஆவாரம்பூ
ஆவாரம்பூ
ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ - உஞ்ஞை:40/267

அம் தண் ஆவிரை அலரும் அறுகையும் - இலாவாண:3/31
ஆவிரை
ஆவிரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *