ஆவிரை, ஆவாரை, ஆவாரம் எனப் பலவாறாக அழைக்கப்படும் செடி/அதன் பூ
1. சொல் பொருள்
(பெ) ஆவாரம் செடி/அதன் பூ
2. சொல் பொருள் விளக்கம்
ஆவிரை, ஆவாரை, ஆவாரம், துவகை, மேகாரி எனப் பலவாறாக அழைக்கப்படும் செடி/அதன் பூ. ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது சித்த மருத்துவப் பழமொழி.
தொல்காப்பியர் இந்த மரவினத்தைக் குறிப்பிடுகிறார். ஆவிரை என்னும் மரப்பெயர் அதன் பகுதிகளைக் குறிக்கும்போது ஆவிரங்கோடு, ஆவிரஞ்செதிள் (பட்டை), ஆவிரந்தோல், ஆவிரம்பூ – என வரும் என்கிறார்
மொழிபெயர்ப்புகள்
matura tea tree, avaram or ranawara , (Kannada: ಆವರಿಕೆ āvarike, Marathi: तरवड, Malayalam: ആവര, Sinhala: රණවරා ranawarā,Telugu: తంగేడు taṃgēḍu, Tamil: ஆவாரை āvārai) or the English version avaram senna. It is the State flower of Telangana.
3. ஆங்கிலம்
Tanner’s senna, Cassia auriculata, Senna auriculata ;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1 பொன் போன்ற ஆவிரையின் புது மலர் சேர்ந்த பனையும் அரையும் ஆவிரை கிளவியும் - எழுத். உயி.மயங்:81/1 விரி மலர் ஆவிரை வேரல் சூரல் - குறி 71 பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த - குறு 173/1
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலி 138/9 பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற - கலி 138/18 அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8 களரி ஆவிரை கிளர் பூ கோதை - அகம் 301/14
ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ - உஞ்ஞை:40/267 அம் தண் ஆவிரை அலரும் அறுகையும் - இலாவாண:3/31
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்