சொல் பொருள்

(வி) 1. தாழ்ந்துவிழு, 2. தாழ ஒலியெழுப்பு 3. பரப்பிவிடு

சொல் பொருள் விளக்கம்

1. தாழ்ந்துவிழு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

descend, sound as a drum, spread over

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு – சிறு 13

மெல்லிதாகக் கீழே இறங்கும் மேகங்களின் அழகைக் கொண்டு

கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் – அகம் 112/14

கூட்டமான மான்கள் தாழ ஒலிக்கும் மிளகுக்கொடிகள் படரும் மலைச்சாரலில்

தருகணாளர் குடர் தரீஇத் தெறுவரச்
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/10,11

இறந்துபட்ட வீர மறவர்களின் குடலை வெளியே இழுத்துக் குவியலாக
சிவந்த செவியையுடைய பருந்து அச்சம்தோன்றப் பரப்பிவிடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.