சொல் பொருள்

(வி.எ) 1. இடையிட்டு, 2. இடப்பட்டு, இட்டுக்கொண்டு, 3. மேற்கொண்டு, 4. கீழே எறி, 

சொல் பொருள் விளக்கம்

1. இடையிட்டு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

intervening, happening or occurring in the middle, putting on, undertaking, throw down

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இடூஉ ஊங்கண் இனிய படூஉம் – நற் 246/1

(நாம் ஒன்றனைக் கருதியிருந்தோம்) அதனை இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்டாகா நின்றன
– இடூ, படூ என உகரம் நீண்டு, உகரம் பெற்று இடூஉ,படூஉ என்றாயினமை அறிக
– பின்னத்தூரார் உரை விளக்கம்

கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/9

செவ்வலரி மாலை இடப்பட்டு இறந்துகிடந்தாற் போல

யாண்டு பல கழிய வேண்டுவயின் பிழையா
தாள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய
நெடும் பரி புரவி கைவண் பாரி – அகம் 78/19-22

பல ஆண்டுகள் கழியவும், போரை விரும்பிச்செய்யும் இடத்தினின்றும் பெயராமல்
முயற்சியை மேற்கொண்டு வென்று, பகைவர் வாட்போரினைக் கலக்கி
நிமிர்ந்த கொம்புகளையுடைய களிற்றினையுடைய மூவேந்தரையும் பிறக்கிடச்செய்த
மிக்க விரைவினையுடைய குதிரையினையும் கைவண்மையினையும் உடைய பாரிவேளின்
– நாட்டார் உரை.
– தாள் இடூஉ – முயற்சியை மேற்கொண்டு – புலவர்.அ.மாணிக்கம் உரை விளக்கம்.
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய – அகம் 115/9

எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉ பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர்
சுடர் பூ கொன்றை – அகம் 115/8-11

எவ்வி என்பான் வீழ்ந்த போர்க்களத்தே பாணர்கள்
கையால் தொழும் முறைமையோடு முன்னர் வாழ்த்திய, (பின்னர்) ஒடித்து எறிந்த
வளம் பொருந்திய ஒலியையுடைய வளைந்த கோட்டினை ஒத்த ஒளி பொருந்திய கொத்துக்களையுடைய
சுடரும் பூக்களையுடைய கொன்றையினது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.