Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இப்படிப்பட்ட நிலையிலுள்ளவர் (தன்மை), 2. மேலும், இன்னும்

சொல் பொருள் விளக்கம்

1. இப்படிப்பட்ட நிலையிலுள்ளவர் (தன்மை),

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(we) being in such a state

more than this

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்ன ஆக இனையல் தோழி யாம்
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/1-3

நம் காதலர் எப்படிப்பட்டவராயினும் இனி அவர் பற்றிய நினைவை விட்டுவிடு,
அப்படி இருப்பதற்காக வருந்தவேண்டாம் தோழியே! நாம்
இப்படிப்பட்டவராய் ஆகிவிடும்படி நம்மைத் துறந்துசென்றோரின் நட்பு இனி நமக்கு எதற்கு?

நன் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும்
உண்ணா உயக்கமொடு உயிர் செல சாஅய்
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/1-3

அழகிய நெற்றி பசந்திடவும், பெரிய தோள் மெலிந்திடவும்
உண்ணாமையாலாய வருத்தத்தால் உயிர் நீங்க மெலிந்து
நாம் இந் நிலையினமாகவும் இங்கு நம்மைவிட்டுப் பிரிந்தார் நம் தலைவர்

வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ
செம் வாய் வானத்து ஐயென தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ – குறு 307/1-3

வளையலை உடைத்தது போல ஆகி, பலரும் தொழ
சிவந்த இடத்தையுடைய வானத்தில் விரைவாகத் தோன்றி
இன்னும் பிறந்தது பிறை! அந்தோ!
– பிரிவானே யான் நலியாநிற்பவும், மேலும் பிறையும் பிறந்து வருத்தும் என்பாள், இன்னம் பிறை
பிறந்தன்று என்றாள். பொ.வே.சோ உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *