சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால மனிதர்
சொல் பொருள் விளக்கம்
ஒரு சங்ககால மனிதர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a person in sangam priod
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இந்த இயக்கன் என்ற மனிதர், ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர் பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் மன் எயில் ஆந்தையும் உரைசால் அந்துவன் சாத்தனும் ஆதன் அழிசியும் வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும் கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/11-15 பொய்யாத புதுவருவாயையுடைய மையல் என்னுமூர்க்குத் தலைவனான மாவனும், நிலைபெற்ற எயில் என்னும் ஊரையுடைய ஆந்தையும், புகழ் அமைந்த அந்துவஞ்சாத்தனும், ஆதனழிசியும், வெய்ய சினத்தையுடைய இயக்கனும் என இவர் உட்பட பிறரும் எனது கண் போலும் நண்பினையுடைய நட்டாரோடு கூடிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்