சொல் பொருள்
(வி) 1. யாசகம் கேள், 2. வேண்டு. 2. ஒரு மரம், இரவம்,
பார்க்க : இரவம்
சொல் பொருள் விளக்கம்
யாசகம் கேள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beg, entreat, pray, solicit, a tree,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்ப – கலி 120/4-6 தன் உள்ள உறுதியின் மேன்மை தேயும்படியாக, தனக்கு வந்த வறுமையினால் ஒருவனை இரந்துகேட்பவனின் நெஞ்சம் போல பொலிவிழந்து தோற்றத்தில் தொய்வுபட்டு, இரப்பவனைக் கண்டு மறைந்துகொள்பவன் நெஞ்சம் போல மரம் எல்லாம் இலைகள் எல்லாம் குவிந்துபோக, எந்தையும் யாயும் உணர காட்டி ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின் மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே – குறு 374/1-4 நம் தந்தையும் தாயும் உணரும்படி அறிவித்து மறைத்து வைத்திருந்த செய்தியை வெளிப்படையாகப் பேசிய பின்னர் மலைகள் பொருந்திய இடத்தைச் சேர்ந்த நம் தலைவன் நம்மிடம் வந்து வேண்ட நல்லதையே விரும்பும் கொள்கையினால் கருத்துகள் ஒன்றுபட்டன; இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை – அகம் 125/3 இரவம் வித்தினை ஒக்கும் அரும்பு முதிர்ந்த ஈங்கையினது – இர – ஒரு மரம்; இஃது இரவு, இரவம் எனவும் வழங்கும். -நாட்டார் உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்