Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு வகை மான்

சொல் பொருள் விளக்கம்

இரலை இன மான்களின் கொம்புகள் உள்துளை அற்றவை. துளையற்று உள்ளே கெட்டியாக இருக்கும். மற்றும் இரலைஇன மான்களின் கொம்பு கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைப்பதில்லை. கலைமானினத்தின் கொம்புகள் உள்துளையுடையவை. கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இரலை இன மான்களின் கொம்பில் கிளைகள் இல்லை. கலைமானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. இந்த அடிப்படை வேற்றுமையைக் கொண்டு மான் வகைகளை இரலை இனமா கலையினமா என்று எளிதில் பிரித்துவிடலாம். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 85.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இதில் ஏறு எனப்படும் ஆண்மானைப் பற்றிய வருணனை.

பெரிய கழுத்தை உடையது

மா எருத்து இரலை – நற் 69/4

பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடையது

இரு திரி மருப்பின் அண்ணல் இரலை – அகம் 34/4

அஞ்சாத வலிய பார்வையை உடையது

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 15/5

கருமையான கொம்புகளையுடையது

கரும் கோட்டு இரலை – அகம் 74/9

முதுகு வெண்மையானது 

வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை – அகம் 139/10

அறல் பட்ட கொம்புகளையுடையது 

அறு கோட்டு இரலை – பட் 245

கொம்புகள் வலப்பக்கமாக முறுக்கியிருக்கும்

வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு – அகம் 304/9

பெண்மானூடன் துள்ளி விளையாடும்

திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.