Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. இருத்தி, வைத்து, 2. இருந்து 3. இரித்து, ஓட்டி,

சொல் பொருள் விளக்கம்

1. இருத்தி, வைத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

placing, being, staying, driving away

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரீஇ என்ற சொல் சங்க இலக்கியத்துள் 19 முறை வருகிறது. அவற்றுள், 15 முறை, இச் சொல் ஓர் அடியின்
இறுதிச் சீராகவே வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ
நாள்_மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 159,160

(தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து,
அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்

வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ – அகம் 182/2

வளைந்த மூங்கிலாலாய வலிய வில்லைத் தோளில் இருத்தி

கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – மலை 549

கல்லென்னும் ஆரவாரத்தையுடைய சான்றோர் இருக்கும் நல்ல பேரத்தாணிக்கண்ணே இருந்து
– பொ.வே.சோ.உரை

மாரி இரீஇ மான்றன்றால் மழையே – நற் 381/10

மழையை இருந்து பெய்யத்தொடங்கின மேகங்கள்
இங்கே ’இருந்து’ என்பதை – மாறாது ஒரு தன்மையாய் என்பார் பின்னத்தூரார்.
– நிலைத்திருந்து என்பார் புலியூர்க் கேசிகனார்.
– ஒரே நிலையில் என்பார் ச.வே.சு. அவர்கள்

கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇ – ஐங் 388/2

கரிய அடிப்பகுதியையுடைய இந்த யா மரத்தினது கொடுகோடாக அமைந்த புல்லிய நிழலின்கண்ணே இருந்து

தாழ் பூ கோதை ஊது வண்டு இரீஇ – அகம் 298/12

தாழ்ந்த பூமாலைக்கண் ஊதும் வண்டினை ஓட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *