சொல் பொருள்
இருநூறு – இருநூறாண்டு வாழ்க
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் தும்முங்கால் நூறு என்று வாழ்த்துவர். ‘நூறாண்டு வாழ்க’ என்பதன் சுருக்கம் நூறு என்பதாம். ‘தும்மல்’ கேடு என்னும் கருத்தால், அந்நிலையின்றி நலம் பெறுக என்னும் வாழ்த்தாக மாற்றிக் கூறுவது வழக்காயிற்று. அத்தும்மல் மீளவும் உடனே வருங்கால் இருநூறு’ என்பர். இரு நூறாண்டுகள் வாழ்க என்பது அவ்வாழ்த்தின் உட்கிடையாம். இருநூறு என்னும் எண்ணுப்பெயர் வாழ்த்தாக அமைதல் வழக்காதலின் இங்கு எண்ணத் தக்கதாம். தும்முதல் பிறர் நினைப்பதன் குறி என்னும் எண்ணம் பண்டேயுண்டு என்பதற்குத் திருக்குறளில் வரும் ஊடற் குறிப்புகள் சான்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்