Skip to content
இருப்பை

இருப்பை என்பதன் பொருள்இலுப்பை மரம்.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) இலுப்பை மரம், சங்க காலத்து ஊர் இரும்பை

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

south Indian mahua

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை – அகம் 267/6

பூனையின் அடியினை ஒத்த குவிந்த அரும்பினையுடைய இருப்பை

அத்த இருப்பை பூவின் அன்ன - நற் 111/1

மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் - நற் 260/7

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை/தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ - நற் 279/1,2

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் - நற் 350/4

கான இருப்பை வேனில் வெண் பூ - குறு 329/1

கைவண் விராஅன் இருப்பை அன்ன - ஐங் 58/2

அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை/செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு - அகம் 9/3,4

அத்த இருப்பை ஆர் கழல் புது பூ - அகம் 15/13

ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் - அகம் 81/2

பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற - அகம் 95/6

அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் - அகம் 107/16

ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ - அகம் 135/8

புல் அரை இருப்பை தொள்ளை வான் பூ - அகம் 149/3

கரும் கோட்டு இருப்பை ஊரும் - அகம் 171/14

பூத்த இருப்பை குழை பொதி குவி இணர் - அகம் 225/11

கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின் - அகம் 247/5

வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை/மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ - அகம் 267/6,7

திரள் அரை இருப்பை தொள்ளை வான் பூ - அகம் 275/11

குதிர் கால் இருப்பை வெண் பூ உண்ணாது - அகம் 321/5

நீடு நிலை அரைய செம் குழை இருப்பை/கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ - அகம் 331/1,2

புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம் - அகம் 351/8

கரும் கோட்டு இருப்பை பூ உறைக்குந்து - புறம் 384/7

முருகு அவிழ் துணர்கள் உகுத்து காய் தினை விளை நடு இதணில் இருப்பை காட்டிய - திருப்:33/13

செந்தளிர் இருப்பை பைம் துணர் வான் பூ - உஞ்ஞை:52/70

ஏர் இலவங்கமும் ஏலமும் இருப்பையும்
ஓரி மீமிசை பாய்தலில் கிழிந்து - உஞ்ஞை:50/33,34

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.