சொல் பொருள்
வரி விதிக்கப் பெறாமல் ஒதுக்கப் பெற்ற நிலம் இறையிலி எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
வரி விதிக்கப் பெறாமல் ஒதுக்கப் பெற்ற நிலம் இறையிலி எனப்படும்.
சைவ வைணவத் திருக்கோயில்களுக்கு இறையிலியாக அளிக்கப் பட்ட நிலங்கள் ‘ தேவதானம் ’ எனவும்
சைன பௌத்தக் கோயில்களுக்கு அளிக்கப் பெற்றவை ‘பற்றிச் சந்தம்’ எனவும்,
பார்ப்பனர்க்கு விடப்பெற்றவை ‘பிரமதேயம் பட்ட விருத்தி’ எனவும்,
அறிநிலையங்கட்கு விடப் பெற்றவை ‘சாலா போகம்’ எனவும் வழங்கப்பெற்றன.
புலவர்க்கு அளிக்கப்பெற்றது ‘புலவர் முற்றூட்டு’ எனப்படும்.
(முதற் குலோத்துங்க சோழன். 89 – 90.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்