சொல் பொருள்
இளக்காரம் – பிறரை மெலிதாக அல்லது இழிவாக மதித்தல்.
எக்காரம் – தன்னைப் பெருமையாகக் கருதிச் செருக்குதல்.
சொல் பொருள் விளக்கம்
இளம்-மென்மை, மெலிதாக நினைத்தல். வலம் – வன்மை; வலிய கை – வலக்கை; மென்மையான கை – இடக்கை, இளம் – இடம் ஆயது. பயிற்சி – வன்மை, இன்மையைக் கொள்க.
எக்காரம், ஏக்காரம்; ஏக்கழுத்தம் என்பது எக்கழுத்தம் ஆயினாற்போல ஏக்காரம் எக்காரம் ஆயிற்றாம். ஏக்காரம்- இறுமாப்பு.
“உன் இளக்காரமும் எக்காரமும் எப்பொழுது ஒழியுமோ?” என ஏக்கத்துடன் வசைமொழிவதுண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்