Skip to content

சொல் பொருள்

(வி) 1. உடல் மெலி, 2. சோர்வடை,

2. (பெ) பாதுகாவல்,

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

grow lean, grow weary, fatigued, protection

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காடு தேர் மட பிணை அலற கலையின்
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி – அகம் 285/5-7

தன் கலையினைக் காட்டில் தேடும் இளைய பெண்மான் கதற, ஆண்மானின்
ஓடித் தப்புதற்குரிய தொடையினைச் சிதைத்த செந்நாயின் ஆண்
வெய்யிலை வெறுத்து மெலியும் வெப்பம் பொருந்தியன
– நாட்டார் உரை

காடு தேர் மட பிணை அலற கலையின்
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை
வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி – அகம் 285/5-7

தன் கலையினைக் காட்டில் தேடும் இளைய பெண்மான் கதற, ஆண்மானின்
ஓடித் தப்புதற்குரிய தொடையினைச் சிதைத்த செந்நாயின் ஆண்
வெய்யிலை வெறுத்துச் சோர்வடையும் வெப்பம் பொருந்தியன
– இந்தப் பொருள் ஏற்புடையதெனத் தோன்றுகிறது.

– gets tired in the hot sun that it hates என்றே பொருள் கொள்கிறார் vaidehi herbert அவர்கள்.

எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/2

பகற்பொழுதும் இருளாகிவிட்டது; வேட்டைநாய்களும் சோர்ந்துவிட்டன

இளை இனிது தந்து விளைவு முட்டு_உறாது – பதி 28/5

(பாதுகாவலை இனிது தந்து விளைச்சலைப் பெருக்கி)

இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து – அகம் 310/15

(பாதுகாவலை உடைய பேடை அஞ்சியோட ஒலித்து எழுந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *