சொல் பொருள்
அடிப்படைப் பண்புக் கேடுகளில் ஒரு சிறிது சறுக்கியவர்கூட மெல்ல மெல்ல, படிப்படியாகவே, ஆனால் மீளா வகையில் கேடு நோக்கிச் சென்றழிவர் என்பதை இழுக்குதல் என்ற இத்தமிழ்ச்சொல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது
சொல் பொருள் விளக்கம்
மேல் நோக்கில் நல்ல நிலத்துக்கும் புதைமணல் அல்லது புதை சேற்று மண்ணுக்கும் வேற்றுமை காண முடியாது. தவறி அதில் சறுக்கியவன் புற உதவி கிட்டினாலன்றி மெல்ல மெல்ல, படிப்படியாகவே ஆனால், மீளாவகையில் அழிவு நோக்கிச் செல்வது போலப் போலிப் பண்புகளான அடிப்படைப் பண்புக் கேடுகளில் ஒரு சிறிது சறுக்கியவர்கூட மெல்ல மெல்ல, படிப்படியாகவே, ஆனால் மீளா வகையில் கேடு நோக்கிச் சென்றழிவர் என்பதை இழுக்குதல் என்ற இத்தமிழ்ச்சொல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. (திருக்குறள். மணிவிளக்கவுரை. ஐ. 839.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்