Skip to content

சொல் பொருள்

(வி) 1. செறிவாக அமைந்திரு,

2. கூடு

3. நிறைந்திரு, மிகு

(வி.அ) 4. இந்த இடத்தில்,

சொல் பொருள் விளக்கம்

1. செறிவாக அமைந்திரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

to get to be a compact mass, as the atoms of earth;

come together

abound

in this place

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 192,193

அரியனவும்,பெரியனவுமாகிய பொருள்கள் நிலன் நெளியும்படி செறிவாகத் திரண்டு செல்வம் தலைதெரியாது மயங்கிக் கிடக்கும் அகன்ற இடங்களையுடைய தெருவினையும்

இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10

கூட்டமாகிய மீன்களைத் தின்பதற்கு வந்து கூடுகின்ற பறவைகள் ஒலிக்கின்ற குரல்

இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – அகம் 393/15

கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல

குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/6

குவளை மலர் போன்ற மையுண்டகண்களையுடைய இவள் இவ்விடத்தில் நிற்குமாறு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *