Skip to content
ஈந்து

ஈந்து என்பதன் பொருள்பேரீச்சை மரம்.

1. சொல் பொருள்

(பெ) – ஈச்சை, பேரீச்சை மரம், நஞ்சு 

கொடுத்து

2. சொல் பொருள் விளக்கம்

ஈந்து, ஈச்சை, பேரீச்சை மரம், களர் நிலத்தில் வளரக் கூடியது. இவை 1300 மீட்ர் உயரம்வரை சமவெளிகளில் வளரக்கூடியவை. இதன் காய்கள் மஞ்சள் நிறத்துடன் இருக்கும் பழுக்க ஆரம்பித்த பிறகு சிவப்பு வண்ணமடைந்து இறுதியில் பழுப்பு நிறத்தை அடையும். இதன் பழங்கள் உண்ணத்தக்கது.

அரபு நாடுகளில் அதிக அளவு ஈச்சமரங்கள் இருக்கின்றன. அஃபந்தி, அஜ்வா, அன்பரா உள்ளிட்ட  பல ரகங்களில் அங்கே பேரீட்சை மரங்கள் வளர்கின்றன.

பனையைப் போன்று இதிலிருந்தும் கள் இறக்கலாம். கற்கண்டு தயாரிக்கலாம். ஈச்ச ஓலைகளைக் கொண்டு பாய், துடைப்பம் உள்ளிட்ட பொருள்களைச் செய்வார்கள். மட்டைகளில் கூடை முடைவார்கள். தூக்கனாங்குருவிகள் ஈச்ச மர ஓலை நுனியில் கூடுகட்டும். 

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு கிராமங்களில் ஈச்சமரங்கள் ஒரே இடத்தில் மொத்தமாக வைத்திருக்கிறார்கள்

ஒரு காலத்தில் “பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழேம்ம்ம்ம்ம்” என்று கூவிக்கொண்டு வருபவரைக் கண்டால் குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம்தான்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Datepalm, Phoenix doctylifera; poison.

ஈச்ச மரம்
ஈச்ச மரம்

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

களர் நிலத்தில்வளரக்கூடியது

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன – பெரும் 130

தழைத்த கெட்டியான பகுதியை உடையது

ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2

(ஒலி =செழி, தழை) கரிய நிறத்தில் கனிந்த பழங்களை உடையது

கரும் களி ஈந்தின் வெண் புற களரி – நற் 126/2

திரட்சியாகவும்,குலைகுலையாகவும் காய்க்கக்கூடியது

கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன – நற் 174/1

காய்கள் சிவப்பாக இருக்கும்

செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் – அகம் 21/20

களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன - பெரும் 130

ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு - நற் 2/2

கரும் களி ஈந்தின் வெண் புற களரி - நற் 126/2

கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன - நற் 174/1

செம் காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின்/பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த - அகம் 21/20,21

ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை - அகம் 55/2

ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து/நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் - புறம் 170/11,12

இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் - புறம் 290/1
பேரீச்சை மரம்
பேரீச்சை மரம்
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய - மணி: 28/129,130

படர் கொடி நுடங்கும் முல்லை பரப்பையும் நீந்தி ஈந்தின்
அடவிகள் புடையில் தோன்றும் அறபு நாட்டகத்தில் புக்கார் - சீறா:1723/3,4

செழும் முகில் கவிகை வள்ளல் செறிதரும் ஈந்தின் செம் காய் - சீறா:2058/3

கோல முள் ஈந்தின் கானும் குரிசில் நம் நபியை மேலும் - சீறா:2566/3

பண்டை நாள் இனிய ஈந்தின் பழம் அறுபஃது கோட்டை - சீறா:4286/2

அடல் புரி சாபிர்-தம்மை அருகினில் கூவி ஈந்தின்
துடவையின் கனிகள் தாரு-தொறும் பறித்து ஈட்டும் என்ன - சீறா:4291/1,2

தேம் கமழ் ஈந்தின் கனியின் ஒன்றேனும் கொடுத்திலம் பயத்தொடும் திருந்த - சீறா:4473/2

தரு எனும் பெயர் பெற சிறந்து ஈந்து இருந்தனவே - சீறா:75/4

புனையும் மென் துகில் கஞ்சுகி சிரத்தணி போல்வன பல ஈந்து
சினவு வேல்_விழி பொருள் கொடு வருக என உரைத்தனர் திரு வாயால் - சீறா:658/3,4

இட்ட முள் இலை ஈந்து அங்ஙன் இருந்து இறந்து அனேக கால - சீறா:818/2

இ நெறி வந்து முன் நாள் இறந்த ஈந்து அடியில் தோன்ற - சீறா:830/1

கொள்ளை மென் கனிகள் சிதறு முள் ஈந்து குறும் கழுத்து அசைவன ஒரு-பால் - சீறா:1004/2

வள்ளியோர்க்கு இனிது ஈந்து மறையோர்க்கும் எடுத்து அருளி வல கை சேர்த்தி - சீறா:1095/3

பொலிவுற சிவந்து ஈந்து இலை என கிளர்ந்து புன கிளி நாசியின் வடிவாய் - சீறா:1965/3

என் உயிர்-அதனை வேடன் இரும் பசிக்கு இயைய ஈந்து
நல் நபி பிணையை மீட்ப நல் மனம் பொருந்திலேனால் - சீறா:2107/1,2

இலகு கலிமா ஓதி மணி துகில் செம் கரத்து இருத்தி வேதம் ஈந்து
பலர் அறிய நபி எனும் பேர் பரித்து ஆண்டும் இருநான்கும் படரும் நாளில் - சீறா:2169/3,4

எதிர் அடுத்த குசையினுக்கு அன்பு அருளினொடும் கரம் சாய்த்திட்டு இருக்கை ஈந்து
மதியினும் மும்மறையினும் தேர்ந்து அவரவர்கள் கருத்து அறிய வல்லோய் நாளும் - சீறா:2181/1,2

இன்னணம் கொடுபோய் ஆண்டின் இருப்பவர் கரத்தின் ஈந்து
பன்ன அரும் பசியை மாற்றி வா என பரிவில் சொன்னார் - சீறா:2244/3,4

எவரும் புந்தியின் மகிழ்வுற வல கரம் ஈந்து
செவி குளிர்ந்த நல் மொழியொடும் அறுதி செய்க என்றார் - சீறா:2461/3,4

இறைக்கும் தேன் கனி துடவையும் அவர்களுக்கு ஈந்து
குறிக்கும் பொன்னையும் முன்னரின் எழுதி நீ கொடுத்த - சீறா:2939/1,2

பரிந்து ஒரு துணைவர்க்கு ஈந்து பாசுரம் விளக்கு என்றாரால் - சீறா:3096/4

பரம்பொருள் விருப்பின் ஈந்த பத்திரம் மகள் கைக்கு ஈந்து
வரம் பெறும் வள்ளல் பள்ளிவாயிலின் அவையின் நண்ணி - சீறா:3104/1,2

அறுசுவை கறியுடன் அன்னம் ஈந்து மேல் - சீறா:3239/2

இரவலரிடத்தினில் பழையது ஈந்து நல் - சீறா:3245/1

ஈந்து அடர் பொழிலிடத்து இறங்கி நம் நபி - சீறா:3316/2

பூணினர் உயிரை ஈந்து புகழினை நிறுத்தும் பொற்பார் - சீறா:3407/2

பிரிவு இலா யார்கட்கு ஈந்து பிடித்த ஒட்டகை ஐந்நூற்றில் - சீறா:3675/2

மாதவ தீனர்க்கு ஈந்து வானவர் பரவி வாழ்த்த - சீறா:3676/2

வேத நல் மறையின் உற்ற விதிப்படி தீனர்க்கு ஈந்து
பூதலம் அனைத்தும் போற்ற புகழ் நபி இருந்தார் அன்றே - சீறா:3688/3,4

இடம் பெற இருத்தி செய்யும் வரிசைகள் அனைத்தும் ஈந்து
தடம் கடல் புடவி காத்து தரியலர்க்கு அரி ஏறு என்ன - சீறா:3728/2,3

ஆனேன் தலைவிலை ஈந்து இனி நீ போக என அறைந்தார் - சீறா:4345/2

விலையாம் நிதி உளது ஈந்து உனது உடல் மீட்குவன் விளங்கும் - சீறா:4350/2

செம்பொன் உளது உடன் ஈந்து நம் தீனின்படி சிறப்ப - சீறா:4353/3

எல்லாரும் தொழும் அரிய தீனை வளர்த்து உறு விசயம் எற்கு ஈந்து ஆள்வாய் - சீறா:4531/3

தலைக்கு ஒரு படியால் உள்ள தவசமும் அவருக்கு ஈந்து
விலக்குதல் கடனாம் என்று வந்தது வேதம் என்றார் - சீறா:4795/1,2

தேச யாசகருக்கு ஈந்து செழும் மனையிடத்தில் உன்-தன் - சீறா:4798/2

கணியருப்படை முறித்து கயமுனி திரளுக்கு ஈந்து
பிணையினை அணைத்து சென்று பிலம் படு நிகுஞ்சம் வீழ்த்தி - சீறா:5002/2,3

இருவருக்கு எதிர்தர நின்ற ஈந்து-அதின்
விரி தலை குலை மலர் வீழ்ந்திடாது இவண் - சீறா:2132/1,2

முறை ஈந்து அலது ஆயிர கண் முதல் ஆம் - தேம்பா:5 96/3

இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும் - தேம்பா:5 102/3

எண்ணாதன காட்சியை ஈந்து அறைவான் - தேம்பா:5 108/4

தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் - தேம்பா:8 13/2

ஈந்து தாமும் இல்லார் என ஆய பின் - தேம்பா:9 35/1

விரை செயும் கனி ஈந்து விருந்து எனா - தேம்பா:9 46/3

எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய் என்றாள் - தேம்பா:10 115/4

வல் உயிரை ஈந்து உரி வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே - தேம்பா:18 18/4

இரங்கிய தன்மையின் உதவி ஈந்து அருள் - தேம்பா:26 119/1

கொடை தரும் பயனே இஃதேல் குளித்த-கால் கெடும் என்று ஈந்து
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவு-மின் என்றான் சூசை - தேம்பா:27 79/1,2

என்ன உண்டியை ஈந்து அளித்தேன் அவன் - தேம்பா:31 76/2

புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் - தேம்பா:32 43/2,3

என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே - தேம்பா:32 49/2

நோன்மையே அரசு ஈந்து அங்கண் நுண்தகை மேன்மை ஆகும் - தேம்பா:33 3/3

மோட்டு வளம் சுரக்கும் ஊரும் முழுது ஈந்து
வேட்டார்க்கு வேட்டனவே போன்று இனிய வேய் மென் தோள் - சிந்தா:4 1042/2,3

பெறு தகு புதல்வற்கு ஈந்து பின்னை நீ துறத்தி என்றான் - சிந்தா:13 2883/4

பார் முழங்கு தெண் திரை போல் செல்வம் தம் பாலர்க்கு ஈந்து
ஊர் முழுது நாடும் உரவோன் தாள் சேர்ந்தவே - சிந்தா:13 2981/3,4

மெய் முறை கடவுளோர்க்கு ஈந்து விண்ணுளோர்க்கு - பால:5 92/2

உரியது இந்திரற்கு இது என்று உலகம் ஈந்து போய் - பால:8 27/1

தெய்வமும் பராவி வேத பாரகர்க்கு ஈந்து செம்பொன் - பால:22 18/2

ஈந்து அளவு இல்லது ஓர் இன்பம் நுகர்ந்தே - பால:23 102/1

ஈட்டிய தவத்தின் மிக்க இரிசிகற்கு ஈந்து போனான் - பால:24 30/4

அன்னவன்-தனக்கு வேந்தன் அரசொடு முடியும் ஈந்து
பொன் நகர் அடைந்த பின்னர் புகழ் மகோதயத்தில் வாழும் - பால-மிகை:8 8/1,2

எழுது கீர்த்தியாய் மைந்தனுக்கு அரசியல் ஈந்து - பால-மிகை:9 38/4

அணங்கினை அவன் கை ஈந்து ஆண்டு அரும் தவனோடும் வாச - பால-மிகை:9 64/3

மாற்றாள் செயல் ஆம் என்றும் கணவன் வரம் ஈந்து உள்ளம் - அயோ:4 51/1

பெற்றுடைய மண் அவளுக்கு ஈந்து பிறந்து உலகம் - அயோ:4 107/1

மன்னனே அவனியை மகனுக்கு ஈந்து நீ - அயோ-மிகை:1 1/1

அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் - சுந்:3 26/2

வன் குலம் கூற்றுக்கு ஈந்து வானவர் குலத்தை வாழ்வித்து - சுந்:14 28/3

இடைக்கு அலமருதல் செய்யும் முலையினாள்-தன்னை ஈந்து
படைக்கலம் உடைய நாம் அ படை இலா படையை ஈண்ட - யுத்1:13 16/2,3

இலங்கை ஊர் இவனுக்கு ஈந்து வேறு இடத்து இருந்து வாழ்வேன் - யுத்2:17 51/1

மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அ - யுத்3:26 6/3

தாய் படை துடைய செல்வம் ஈக என தம்பிக்கு ஈந்து
வேய் படைத்துடைய கானம் விண்ணவர் தவத்தின் மேவி - யுத்3:31 228/1,2

யானும் மெய்யினுக்கு இன் உயிர் ஈந்து போய் - யுத்4:41 78/1

புரிந்து ஓர் ஆகுதியை ஈந்து புறப்படும் அளவில் போகம் - யுத்4-மிகை:41 174/3

ஆங்கு அவற்கு அவயம் நல்கி அரசொடு முடியும் ஈந்து
பாங்கினால் வருணன்-தன்னை அழைத்திட பதைப்பு இலாது - யுத்4-மிகை:41 241/1,2

அன்னையும் மகனும் முன் போல் ஆக என அருளின் ஈந்து
மன்னவன் போய பின்றை வானரம் வாழ்வு கூர - யுத்4-மிகை:41 249/2,3

மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து மலரவற்கு ஒரு முகம் ஒழித்து - தேவா-சம்:443/1

பஞ்சவரில் பார்த்தனுக்கு பாசுபதம் ஈந்து உகந்தான் - தேவா-சம்:671/3

சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால் - தேவா-சம்:877/2

உண்ணவனை தேவர்க்கு அமுது ஈந்து எ உலகிற்கும் - தேவா-சம்:1096/2

இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் - தேவா-சம்:1925/3

மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட - தேவா-அப்:176/2,3

பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த - தேவா-அப்:1021/1

ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து - தேவா-அப்:1024/3

தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள் - தேவா-அப்:2836/3

தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை - தேவா-சுந்:642/2

சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து
காலம் கழிந்த பயிர் அது ஆகுமே - திருமந்:505/3,4

ஏனைய முத்திரை ஈந்து ஆண்ட நல் நந்தி - திருமந்:1592/3

பத்தி உடை குகன் கடத்த வனம் போய் புக்கு பரதனுக்கு பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான்-தன்னை இன்று தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:744/2,3

எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன் இன் உயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்-தன்னை தில்லைநகர் திருச்சித்ரகூடம்-தன்னுள் - நாலாயி:747/2,3

கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் - திருப்:763/7

குடரும் நீர் கொழு மலமும் ஈந்து ஒரு குறைவு இலா பல என்பினாலும் - திருப்:1057/1

சுருதி வாய்மையின் யோசனை பரப்பு எழு சுகந்தமும் எனக்கு ஈந்து
வருதி நீ என பனியினால் மறைத்து ஒரு வண் துறை குறை சேர்ந்தான் - வில்லி:2 5/3,4

புரோசன பகைவற்கு ஈந்து புரந்தரன் இருந்த பின்னர் - வில்லி:13 160/2

ஆண் தகை கன்னி முன்னர் அவயவம் அனைத்தும் ஈந்து
காண்தக மலர்ந்த தீபம் என முகம் கவின நின்றான் - வில்லி:28 35/1,2

வேண்டிய பலிகள் ஈந்து வென்றியும் வேண்டி மீண்டார் - வில்லி:28 35/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *