சொல் பொருள்

1. (வி) பிள்ளைபெறு, கன்றுபோடு, குஞ்சுபொரி, குட்டிபோடு, முட்டையிடு,

2. (பெ) இவ்வுலகம்

சொல் பொருள் விளக்கம்

பிள்ளைபெறு, கன்றுபோடு, குஞ்சுபொரி, குட்டிபோடு, முட்டையிடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bring forth an offspring

this world

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புதல்வனை ஈன்ற எம் மேனி – ஐங் 65/3

பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 243

கான மஞ்ஞை அறை ஈன் முட்டை – குறு 38/1 (அறை = பாறை)

பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கின – அகம் 229/16

வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/3

ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5

இந்த உலகமும், மேலுலகமும் பெறுவதற்கு அரியது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.