சொல் பொருள்

(வி) 1. அறு, 2. இழு

(பெ) 3. நெய்ப்பு, எண்ணெய்ப்பசை, பளபளப்பு,, 4. பேனின் முட்டை அல்லது குஞ்சு

(பெ.அ) 5. ஈரமான, 6. இரண்டு, 7. பெரிய

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

saw, pull, oiliness, glossiness, nit, wet, adjectival form of TWO, large

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த – குறு 31/5

சங்கை அறுத்துச் செய்த ஒளிவிடும் வளையல்களை நெகிழச்செய்த

பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் – அகம் 8/7

பலாமரங்கள் செறிந்த மலைப்பகுதியில் புலால் நாற இழுத்துச் செல்லும்

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20

தோழியர் ஆராய்ந்த நெய்ப்பின்னையுடைய மயிர்

ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219

ஈரை உடைய பெரிய தலையில் நிறையச் சூடி

ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341

ஈரமான சேற்றில் ஆடிய கரியநிற பலவான குட்டிகள்

எழினி வாங்கிய ஈர் அறை பள்ளியுள் – முல் 64

திரையால் வளைக்கப்பட்ட இரண்டாகிய அறையினுள்

மயிர் கால் எண்கின் ஈர் இனம் கவர – அகம் 267/8

மயிர் உள்ள கால்களையுடைய கரடிகளின் பெரிய கூட்டம் கவர்ந்து உண்ண

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.