Skip to content

சொல் பொருள்

(வி) 1. யாழ் நரம்பு தெறி, 2. தள்ளு, 3. வீசியெறி, 

சொல் பொருள் விளக்கம்

1. யாழ் நரம்பு தெறி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

thrum, as a string of the Yazh, thrust forward, cast away

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 22,23

மாறாகிய மறப்பண்பினை அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை –
(நரம்புகளைக் கூடத்)தழுவியும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், தெறித்தும், ஒன்றுவிட்டு ஒன்றைத் தெறித்தும்

இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி
வருவது மாதோ வண் பரி உந்தி – அகம் 278/8,9

பெரிய மூங்கிலின் அழகிய தண்டு முரியும்படி தாக்கி,
வருகிறது, அழகிய குதிரைமரங்களைச் சாய்த்துத் தள்ளிக்கொண்டு

குறு நுரை சுமந்து நறு மலர் உந்தி
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் – நற் 68/4,5

சிறிய நுரைகளைச் சுமந்துகொண்டு, நறிய மலர்களை வீசியெறிந்துகொண்டு
பொங்கி வருகின்ற புது நீரில் மனம் மகிழ ஆடுவோம்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *