சொல் பொருள்

(வி) 1. வருந்து, வருத்து, 2. மெலிவடை, 3. துவள்,

சொல் பொருள் விளக்கம்

1. வருந்து

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suffer, cause suffering, grow thin, wilt

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஊன் நசை பிணவின் உயங்கு பசி களைஇயர் – அகம் 367/9

தசையை விரும்பும் பெட்டைநாயின் வருத்துகின்ற பசியைக்களைவதற்காக

ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5

தசை ஒழிந்த யானை மெலிந்து வாடும் வேனில் காலம்

உயங்கு நடை மட பிணை தழீஇய – அகம் 353/11

தளர்ந்த நடையினையுடைய இளைய பெண்யானையைத் தழுவிக்கொண்ட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.