Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. வருந்து,  2. உசாவு, ஆலோசனை கேள்,

2. (பெ) 1. வருத்தம், 2. உயிர்பிழைக்கச்செய்யும் வழி, 

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suffer, take counsel, suffering, means of saving life

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப – நற் 106/5

வருந்தியவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற

நள்ளென் யாமத்து உயவு துணை ஆக – அகம் 103/12

நள்ளென்ற நடு இரவில் அறிவுரைகூறும் துணையாக

என் உயவு அறிதியோ நன் நடை கொடிச்சி – நற் 82/3

என்னுடைய வருத்தத்தை அறிவாயோ! நல்ல நடையழகைக் கொண்ட கொடிச்சியே!

உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் – கலி 139/18

உயிர்வாழ முடியாத இந்த அரிய நோய்க்கு, உயிர் காக்கும் வழி ஆகும், இந்த மையலில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *