Skip to content

சொல் பொருள்

(வி) – 1. கொண்டுபோ, கூட்டிச்செல், 2. தப்பு,  3. ஏவிவிடு, 4. உயிர்வாழ், 5. நற்கதி அடை, ஈடேறு, 

சொல் பொருள் விளக்கம்

1. கொண்டுபோ, கூட்டிச்செல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

carry, take along with, escape as from danger, set on, live, subsist, be saved, redeemed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெம் சுரம் என் மகள் உய்த்த
அம்பு அமை வல் வில் விடலை தாயே – ஐங் 373/4,5

வெம்மையான பாலை வழியில் என் மகளைக் கூட்டிச் சென்ற
அம்பினைத் தொடுத்த வலிய வில்லையுடைய இளைஞனின் தாயும்.

நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் – நற் 78/6

காமநோய் மிகுந்த மிக்க துன்பத்திலிருந்தும் நாம் இங்கே தப்பித்தோம்;

உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக்கோழி தனிப் போர் போல – குறு 305/5,6

ஏவிவிடுவாரும் இல்லாமல், பிரித்துவிடுவாரும் இல்லாமல்,
குப்பைக்கோழிகள் தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல

வள்ளியோர் காணாது உய் திறன் உள்ளி – புறம் 370/1

வள்ளல்தன்மை உடையோரைக் காணாமல், உயிர்வாழும் வகையை எண்ணி

பைதல் நெஞ்சம் உய்யும் மாறே – நற் 75/10

துன்பம் கொண்ட நெஞ்சம் ஈடேறும் வழி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *