சொல் பொருள்

(பெ) 1. வலிமையுடையவர், 2. அறிவுடையோர்,

சொல் பொருள் விளக்கம்

1. வலிமையுடையவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strong persons, wise people

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அருளும் அன்பும் நீக்கி துணை துறந்து
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின் – குறு 20/2

அருளையும் அன்பையும் கைவிட்டு (தம்)துணையைத் துறந்து
பொருள்தேடுவதற்காகப் பிரிந்துசெல்வோர் வலியோர் ஆயின்

உரை சால் சிறப்பின் உரவோர் மருக – புறம் 166/9

புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளவனே

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.