சொல் பொருள்

(வி) உராய், உரை

சொல் பொருள் விளக்கம்

உராய், உரை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rub against something, rub

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33

நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை,

மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை – நற் 362/7

இளங்களிறுகள் தம் உடலைத் தேய்த்துக்கொண்ட பருத்த அடிமரத்தைக்கொண்ட வேங்கை மரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.