சொல் பொருள்
(வி) 1. ஒத்திரு, 2. மாறுபடு, 3. வீணையில் ஒரு நரம்பைவிட்டு ஒரு நரம்பைத் தெறி
சொல் பொருள் விளக்கம்
1. ஒத்திரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
resemble, be in contrast, be variant, twang alternate strings in a vina.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி – அகம் 322/10 பிறைமதியினைப் போன்ற கொம்பினையும், அஞ்சாமையினையும் உடைய பன்றி புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனை பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் – கலி 89/13,14 தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே! இவனோடு மாறுபட்டு, இவனைப் பொய்சொல்ல விடக்கூடாது என்று நெருக்கினால், தப்பித்தேன் வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் – பொரு 23 (நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்