சொல் பொருள்
(வி) 1. ஒலியெழுப்பு, 2. அலை, வருத்து
சொல் பொருள் விளக்கம்
1. ஒலியெழுப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
howl, stir up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் நா நவில் கொடு மணி நல்கூர் குரலே – குறு 86/5,6 பசுவானது ஈக்கள் ஒலியெழுப்பும்போதெல்லாம் சத்தமிடும் நாவு ஒலிக்கும் வளைந்த மணியின் மெல்லிய ஓசையை. குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி – அகம் 94/8 குள்ளநரிகளை அலைத்து ஓட்டும் மிக்க இருளில் நீண்ட ஒலி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்