Skip to content
நவில்

நவில் என்பதன் பொருள்சொல், கூறு, பழகு, பயிற்சிபெறு, ஒலியெழுப்பு, பாடு, பயில், கல், மிகு.

1. சொல் பொருள் விளக்கம்

(வி) 1. சொல், கூறு, 2. பழகு, பயிற்சிபெறு, 3. ஒலியெழுப்பு, 4. பாடு, 5. பயில், கல், 6. மிகு,

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

say, tell, speak, practise, be trained, make a noise, sing, learn, study, read, exceed

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உள்ளுவை அல்லையோ ——————
——————————– —————–
நம்மொடு நன் மொழி நவிலும்
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – அகம் 353/16-23

நினைத்துப்பார்ப்பாய் அல்லையோ! ——————
———————————————- ————
நம்முடன் நல்ல மொழிகளைக் கூறும்
பொலிவுபெற்ற கூந்தலையும் அழகிய அணிகலன்ளையும் உடைய நம் தலைவியின் குணங்களை

ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169

நெற்றிப்பட்டத்தோடு பொலிவு பெற்ற போர்த்தொழிலில் பயிற்சிபெற்ற யானையின்

பழ மழை பொழிந்த புது நீர் அவல
நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் – நற் 42/3-5

தொன்றுதொட்டுப் பெய்யும் வழக்கத்தையுடைய மழை பொழிந்த புது நீர் உள்ள பள்ளங்களிலிருந்து நாவினால் பன்முறை ஒலியெழுப்பும் பல கூட்டமான தவளைகள் கத்துவதால், சிறப்பாகச் செய்யப்பட்ட மணிகளின் ஒலியைக் கேட்கமாட்டாள் ஒளிவிடும் நெற்றியையுடையவள்;

பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர்
நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது – பரி 15/42-44

சுருதியை உணர்த்துகின்ற குழலும் தாளமும் ஒலியெழுப்பும்போது, பாடுவோர் நாவால் இசைத்துப் பாடும் பாடலானது முழவின் இசையை எதிர்கொண்டது போல மலைக்குகைகளில் முழங்கி எதிரொலிக்கின்ற இசை முடிவின்றி ஒலிக்கும்

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே – புறம் 1/6

வேதத்தைப் பயிலும் அந்தணரால் புகழவும்படும்

நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான் இன் சுவைய – புறம் 382/8,9

நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட ஊன் மிகுந்த பலவகையான சோற்றுடனே இனிய சுவையுடைய

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை - திரு 180

சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ - பெரும் 145

நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி - பெரும் 198

கள்ளின் களி நவில் கொடியொடு நன் பல - மது 372

நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் - மது 622

ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை - நெடு 169

வில் நவில் தட கை மேவரும் பெரும் பூண் - மலை 63

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து - மலை 77

தாரொடு பொலிந்த வினை நவில் யானை - மலை 227

நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை - நற் 42/4

வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது - நற் 48/7

இனிய அல்ல நின் இடி நவில் குரலே - நற் 238/11

நா நவில் கொடு மணி நல்கூர் குரலே - குறு 86/6

செல் சமம் தொலைத்த வினை நவில் யானை - பதி 82/4

நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை - பதி 84/4

நா நவில் பாடல் முழவு எதிர்ந்த அன்ன - பரி 15/43

நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8

வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் - அகம் 201/3

வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் - அகம் 213/1

வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் - அகம் 215/10

பணை நிலை முனைஇய வினை நவில் புரவி - அகம் 254/12

நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி - அகம் 314/8

நால் உடன் பூண்ட கால் நவில் புரவி - அகம் 334/11

மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6

வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும் - புறம் 23/8

வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப - புறம் 135/6

வடி நவில் அம்பின் வில்லோர் பெரும - புறம் 168/16

நா நவில் புலவர் வாய் உளானே - புறம் 282/11

வினை நவில் யானை பிணிப்ப - புறம் 347/10

வடி நவில் எஃகம் பாய்ந்து என கிடந்த - புறம் 370/22

செரு நவில் வேழம் கொண்மூ ஆக - புறம் 373/2

மனையறம்படுத்த காதையும் நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் - சிலப்.புகார் 0/64,65

நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும் - சிலப்.புகார் 6/139

வரி நவில் கொள்கை மறைநூல் வழுக்கத்து - சிலப்.மது 13/38

கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் - சிலப்.மது 17/130

கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து - சிலப்.மது 21/13

மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு - சிலப்.வஞ்சி 27/58

கொலை நவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - மணி 13/31

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *