Skip to content
எறுழ்

எறுழ் என்பதன் பொருள் வலிமை

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) வலிமை, குறிஞ்சி நிலத்து மரவகை.

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

strength, prowess

எறுழ்
எறுழ்

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

எறுழ் வலி ஆகும் - சொல். உரி:90/1

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - பெரும் 60

கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் - பெரும் 74

சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ - பெரும் 145

மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின் - மது 729

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - நெடு 31

பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால் - பட் 294

கால் எறுழ் ஒள் வீ தாஅய - ஐங் 308/3

எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள் - பதி 31/20

புண் உடை எறுழ் தோள் புடையல் அம் கழல் கால் - பதி 80/7

எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை - கலி 15/5

பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் - கலி 48/6

கழித்து உறை செறியா வாள் உடை எறுழ் தோள் - அகம் 24/16

இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் - அகம் 78/2

பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை - அகம் 148/1

வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் - அகம் 226/7

தோல் பெயரிய எறுழ் முன்பின் - புறம் 7/6

பீடு உடைய எறுழ் முன்பின் - புறம் 17/16

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – பெரும் 60

தழை விரவின மாலையையும், பருத்த அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்

இரும்பினால் பின்னி அன்ன எறுழ் வலி முழவு தோளார் - சிந்தா:3 785/2

கடா களிற்று எறுழ் வலி காளை சீவகன் - சிந்தா:4 916/3

இனத்து-இடை ஏறு போலும் எறுழ் வலி உரைத்த மாற்றம் - சிந்தா:7 1723/1

எறுழ் வலி தட கை வெற்றி எழில் உமறு இவணின் நம்-பால் - சீறா:1567/1

எறுழ் வலியொடும் இசுலாத்தில் ஆயினார் - சீறா:2166/4

எறுழ் வலி கரிய பாந்தள் இரும் தலை நீட்டிற்று அன்றே - சீறா:2582/4

கால முகில் ஆர் இடி என்ன கணிப்பின் எறுழ் வாச்சியம் கதற - சீறா:4034/2

அருள் அவுபு என்னும் எறுழ் வலி அரசன் அசத்து எனும் குலத்தவர் சூழ - சீறா:4441/3

கூண்டு போர்செய் குறைசிகளோடு எறுழ்
வேண்டுகின்ற படையொடும் மேவியே - சீறா:4816/3,4

எறுழின் மிக்கு உயர் ஒட்டகம் மீதினில் ஏற்றி - சீறா:2030/2

பாந்தள் அன்ன பரேர் எறுழ் தட கையின் - உஞ்ஞை:58/8

எறுழ் மிகு மொய்ம்பன் இழிந்து அகம் புகவே - வத்தவ:7/151

எறுழ் வலி கலுழனே என்ன உன்னி அ - ஆரண்:4 10/3

எறுழ் வலி தடம் தோள்களால் சிலையை நாண் ஏற்றி - கிட்:4 2/3

எறுழ் வலி கணவனை எய்தி யாறு எலாம் - கிட்:10 115/3

இணர் தொகை ஈன்ற பொன் தார் எறுழ் வலி தடம் தோள் எந்தாய் - கிட்:11 87/3

ஆனை ஆயிரம் ஆயிரத்து எறுழ் வலி அமைந்த - கிட்:12 2/1

எண்கின் ஈட்டம் கொண்டு எறுழ் வலி தூமிரன் இறுத்தான் - கிட்:12 6/4

மா வய புயத்து எறுழ் வலி மயிந்தன் வந்து அடைந்தான் - கிட்-மிகை:12 3/4

தாடகைக்கு இரட்டி எறுழ் வலி தழைத்த தகைமையர் தட வரை பொறுக்கும் - சுந்:3 91/3

இனையது ஓர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை - சுந்:3 93/1

போயின உயிரளாம் என நடுங்கி பொறி வரி எறுழ் வலி புகை கண் - சுந்:3 94/3

இலங்கு வெம் சினத்து அம் சிறை எறுழ் வலி கலுழன் - சுந்:9 2/1

இல்லை இல்லையால் எறுழ் வலிக்கு யாரொடும் இகல - சுந்:11 37/2

ஏக நாதனை எறுழ் வலி தோள் பிணித்து ஈர்த்த - சுந்:11 41/3

எண்ணின் மீ சென்ற எறுழ் வலி திறல் உடை இகலோன் - சுந்:11 51/2

மொய்ம்பினின் எறுழ் வலி கருளன் மும்மையார் - சுந்:12 12/4

என்னுடை ஈட்டினான் அ வாலியை எறுழ் வாய் அம்பால் - சுந்:12 80/1

என்று தன் இதயத்து உன்னி எறுழ் வலி தடம் தோள் வீரன் - சுந்-மிகை:1 22/1

இடித்தனர் அசனி அஞ்ச எறுழ் வலி கரங்கள் ஓச்சி - சுந்-மிகை:14 16/2

எறுழ் வலி பொரு இல் தோள் அவுணரோடு அமரர் பண்டு இகல் செய் காலத்து - யுத்1:2 87/1

இறைவன் மற்று இதனை கூற எறுழ் வலி அமைச்சர் பொங்கி - யுத்1-மிகை:13 1/1

வள்ளல் பெரு வெள்ளத்து எறுழ் வலியாரினும் வலியான் - யுத்2:15 185/2

எற்றினன் குத்தினன் எறுழ் வெம் கைகளால் - யுத்2:16 259/4

என் சென்ற தன்மை சொல்லி எறுழ் வலி அரக்கன் எய்தான் - யுத்2:19 196/1

இடங்கரின் வய போத்து அன்ன எறுழ் வலி அரக்கர் யாரும் - யுத்2:19 284/2

இந்திரன் விடையின் பாகன் எறுழ் வலி கலுழன் ஏறும் - யுத்2:19 288/1

எறுழ் வலி புயத்து இராகவன் இள நகை எழும்ப - யுத்2-மிகை:15 38/1

இடங்கர் ஏறு எறுழ் வலி அரக்கன் நேர் ஈர்க்கும் - யுத்3:22 73/3

ஏந்தல் பல் மணி எறுழ் வலி திரள் புயத்து இராமன் - யுத்4:37 104/4

என்ற வாசகம் எறுழ் வலி தோளினான் இயம்ப - யுத்4-மிகை:40 20/1

படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - நெடு 31
எறுழ்
எறுழ்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *