ஊகு என்பது ஊகம்புல்
1. சொல் பொருள்
(பெ) ஊகம்புல், துடைப்பப்புல் பார்க்க : ஊகம்
எண்ணு, முன்கணிப்பு, ஊகி, ஊகஞ்செய்
2. சொல் பொருள் விளக்கம்
ஊகம்புல்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Aristida setacea, Retz., Aristida_purpurea?, a kind of a Broom grass
presumption, conjecture, guess, speculate, assume
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை - குறு 373/5 ஊக நுண் கோல் செறித்த அம்பின் - புறம் 324/5 கான ஊகின் கழன்று உகு முது வீ - புறம் 307/5
கான ஊகின் கழன்று உகு முது வீ அரியல் – புறம் 307/5,5 காட்டிடத்து ஊகம் புல்லினின்றும் உதிர்ந்த பழைய பூ அரியரியாகத் திரண்டவை ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122 ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,
உள் விரித்து உரை என ஊகி கேட்ப - இலாவாண:9/126 ஊகியும் செல்க என ஓம்படுத்து உரைத்து - வத்தவ:11/60
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
சிறப்பு தோழர்…!