Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஊஞ்சலில் ஆடு,  2. முன்னும் பின்னும் அசை, 

2. (வி.அ) 1. அங்கு,  2. முன்பு, 3. அச்சமயத்தில்,

சொல் பொருள் விளக்கம்

ஊஞ்சலில் ஆடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

swing, move to an fro, yonder, prior to, at that time

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள்
அழுதனள் பெயரும்- நற் 90/7,8

பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,
அழுதுகொண்டே அவ்விடம்விட்டுப் போகின்றாள்

கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு
பலர் கொள் பலகை போல
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே – நற் 30/8,9,10

கடலில் மரக்கலம் கவிழ்ந்துவிட, கலங்கி எல்லாரும் கடலுக்குள் வீழ்ந்து
பலரும் பிடித்துக்கொள்ளும் ஒரு பலகை போல,
அவரவரும் பற்றி இழுக்க, நீ நின்றுகொண்டு முன்னும் பின்னும் அசையும் துன்பமான நிலையை

நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 4/5

நீ சிரிப்பதற்கேற்றவற்றை இங்கும், அங்கும் நாங்கள் உன்னைப்பற்றிக் கூற

வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே – குறு 357/8

விண்ணைத்தொடும் மலைநாட்டைச் சேர்ந்தவன் மணப்பதற்கு முன்னே

காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் – நற் 145/4,5

அழகிய கடற்கரைநாடனிடம் நாம் விரும்பிக்கொண்ட நட்பு
இப்போது சிறிதளவும் இல்லாதிருந்த போதும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *