சொல் பொருள்
ஊதுதல் – பருத்தல்
சொல் பொருள் விளக்கம்
‘முன்னைக்கு இப்பொழுது ஊதீவிட்டார்’ என்பதும் ‘ஆளைக் கண்டு மயங்காதே ஊது காமாலை’ என்பதும் வழக்கும் பழமொழியுமாம். ஊதுதல் காற்றடைத்தல் காற்றடைக்கப்பட்ட தேய்வை (இரப்பர்)ப் பை ஊதுவது போல ஊதி விட்டார் என்பது பொருளாம். துருத்தி ஊதுதல் என்னும் தொழிலை அறிக ஊதை என்பது காற்று அதனை வளி என்பதும் உண்டு. அதுவே ‘வாதம்’ எனப்படும். வளி முதலா எணணிய மூன்று என்பார் வள்ளுவர். ஊதுதல் என்பது ஊதும் தொழிலைக் குறியாமல் ஊதிப் பருத்தலாம் நிலையைக் குறித்தலால் வழக்குச் சொல்லாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்