Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கட்டில், 2. வாகனம், 3. ஊர்ந்து நடத்தல், நடை

சொல் பொருள் விளக்கம்

1. கட்டில்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cot, vehicle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்
துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் – கலி 13/15,16

வெண்மை ஒளிவீசும் மாட்சிமை விளங்கும் அன்னத்தூவி பரப்பிய மென்மையான படுக்கையில்,
சிறந்த விலங்காகிய சிங்கத்தின் அமைப்பினைக் கால்களாகக் கொண்ட கட்டிலின்மேல் படுத்துத் துயில்பவளே
– துலங்கு ஊர்தி – தூங்கு கட்டில் – நச் உரை விளக்கம்
– மான் மேல் ஊர்தி என்றது சிங்கம் சுமந்த படுக்கைக்கட்டிலை – பெ.விளக்கம்
– அக் கட்டில் சிங்கத்தின் மேல் ஏறி ஊர்ந்து போதல் போலச் செய்யப்பட்டிருத்தலின்
– அப்பெயர் பெற்றது.

நின் தேர்
முன் இயங்கு ஊர்தி பின்னிலை ஈயாது
ஊர்க பாக – அகம் 44/4-6

நின் தேராகிய
முற்படச் செல்லும் ஊர்தியினை, இனிப் பின்னில்லாதபடி
விரைந்து செலுத்துவாயாக, பாகனே!

ஒரு கால் ஊர்தி பருதிஅம்செல்வன் – அகம் 360/2

ஒற்றைச் சக்கரம் பூண்ட தேரினையுடைய ஞாயிறாகிய அழகிய செல்வன்

மீன் பூத்து அன்ன உருவ பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே – புறம் 399/31,32

வானத்தே விண்மீன்கள் பூத்தாற் போல அழகிய நிறத்தையுடைய பலவாகிய ஆனிரைகளை
ஊர்ந்துசெல்லற்கேற்ற காளைகளோடே நல்கினான்

உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/2

வருத்தத்தால் ஊர்ந்துசெல்வது போலும் நடையினையும் இளமையினையுமுடைய பார்ப்பான்
– ஊர்தி – ஊர்ந்து செல்வது – ஈண்டு நடைக்காயிற்று – ஔ.சு.து.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *