சொல் பொருள்
(பெ) எகின் : அன்னம், கவரிமா, நாய்
சொல் பொருள் விளக்கம்
எகின் : அன்னம்,
இதன் பொருள் ஆய்வுக்குட்பட்டது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
swan, yak, dog
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இதன் தன்மைகள்: நீண்ட மயிரினைக் கொண்டது. வெண்மையான நிறத்தை உடையது. நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91 ஆட்டுக்கிடாயுடன் சுழன்று திரியும் ஏழக தகரோடு எகினம் கொட்கும் – பெரும் 326 கூர்மையான பற்களைக் கொண்டது கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/5 வெண்மையான மயிரினைக் கொண்டது. தம் துணையுடன் விளையாடி மகிழும். தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/12,13
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
வணக்கம்.
மிகநல்லிடுகை.
நல்விளக்கத்துடனமைந்துள்ளது.
மிகுமகிழ்ச்சி.
நிறைநன்றியுரித்து.
19-6-2022.