Skip to content

சொல் பொருள்

(பெ) எகின் : அன்னம், கவரிமா, நாய்

சொல் பொருள் விளக்கம்

எகின் : அன்னம்,

இதன் பொருள் ஆய்வுக்குட்பட்டது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

swan, yak, dog

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இதன் தன்மைகள்:

நீண்ட மயிரினைக் கொண்டது. வெண்மையான நிறத்தை உடையது.

நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை – நெடு 91

ஆட்டுக்கிடாயுடன் சுழன்று திரியும்

ஏழக தகரோடு எகினம் கொட்கும் – பெரும் 326

கூர்மையான பற்களைக் கொண்டது

கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர் – நற் 132/5

வெண்மையான மயிரினைக் கொண்டது. தம் துணையுடன் விளையாடி மகிழும்.

தூ மயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் – அகம் 34/12,13

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “எகினம்”

  1. இராமலிங்கன் கண்ணாடிக்கலைஞர்

    வணக்கம்.
    மிகநல்லிடுகை.
    நல்விளக்கத்துடனமைந்துள்ளது.
    மிகுமகிழ்ச்சி.
    நிறைநன்றியுரித்து.
    19-6-2022.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *