Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மறுபிறவி, 2. பிறப்பிலே வரும் குறை, 3. சந்ததி, மகப்பேறு, 4.புகழ்

சொல் பொருள் விளக்கம்

எச்சம் – சந்ததி. தான் இறந்தொழிய எஞ்சி நிற்பது சந்ததி ஆதலால் சந்ததி எச்சம் எனப்பட்டது. (திருக்குறள். தண்டி. 112.)

“தம்மால் ஆக்கப்பட்டுத் தமக்குப்பின் தம்பெயர் விளக்கி நிற்கும் புகழும்” எச்சம் ஆகும். (திருக்குறள். தண்டி. 238.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

next birth, Deformity at birth of which eight types are mentioned, posterity, offspring

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/6,7

தனது வறுமைக் காலத்தில் தனக்கு உதவியோருக்கு, அவரது வறுமைக் காலத்தில் அவருக்கு உதவாதவன், அவன்
மறுபிறவி எடுத்தாலும் வந்து துன்புறுத்தாது போகாது.
– மா.இரா. உரை.
– செய்நன்றிக்கேடாகிய அது தன் உடம்பினை ஒழித்து உயிர்போனவிடத்தேயாயினும் நுகர்வியாமற் போகாது
– நச். உரை

சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் – புறம் 28/1-4

மக்கட்பிறப்பில் சிறப்பில்லாத குருடும், வடிவில்லாத தசைப்பிண்டமும்
கூனும், குள்ளமும், ஊமையும், செவிடும்
விலங்குத்தோற்றமும், அறிவு மயங்கியிருப்பதும் உளப்பட உலகத்து வாழ்வார்க்கு
எட்டுவகைப்பட்ட பெரிய எச்சம் என்று சொல்லப்பட்ட இவை எல்லாம்
– எச்சம் – மக்கட்பிறப்புக்குரிய இலக்கணம் எஞ்ச உள்ளன. – ஔ.சு.து.உரை விளக்கம்

வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும்
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/25,26

கொடையும், மாட்சிமையும், செல்வமும், மகப்பேறும்,
தெய்வ உணர்வும் ஆகிய யாவையும் தவப்பயன் பெறுவோர்க்கே என்று அறிவுறுத்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *