சொல் பொருள்
(பெ) 1. பலியுணவில் மீதம், 2. உமிழ்நீர்பட்டு அசுத்தமானது
சொல் பொருள் விளக்கம்
1. பலியுணவில் மீதம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Leavings of sacrificial oblation made of pounded rice and offered in potsherds.
Anything defiled by contact with the mouth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவர் அவி உடன் பெய்தோரே அழல் வேட்டு அ அவி தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் வட_வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 5/40-45 அந்த முனிவர்கள் வேள்வியுணவாக, ஒன்றாகச் சேர்த்துப் போட்டார் தீயினால் வேள்வி செய்து; அந்த வேள்வி அவியைக் குண்டங்களில் எழுந்த முத்தீயும் உண்ணுவதால் சேர்ந்த பெருமைக்குரிய எச்சத்தை, வானத்தில் வடக்குத்திசையில் ஒளிவிட்டுத் திகழும் கார்த்திகை மீனாய் இருக்கும் ஏழு மகளிருள் கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்; பச்சூன் தின்று பை நிணம் பெருத்த எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரி புலம் புக்கனனே புல் அணல் காளை – புறம் 258/4-6 செவ்வித் தசையைத் தின்று, செவ்வி நிணம் மிக்க எச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தே திமிர்ந்து வேற்றுநாட்டின்கண் புக்கான் புல்லிய தாடியையுடைய காளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்