சொல் பொருள்
எடுப்பு – ஒரு வினாவை எழுப்பவது அல்லது ஒரு பாடலின் முற்பாதியை இயற்றுவது.
தொடுப்பு – எழுப்பிய வினாவுக்குத் தொடுத்து விடை தருவது அல்லது பாடலுக்குரிய பிற்பாதியைத் தொடுத்து இயற்றுவது.
சொல் பொருள் விளக்கம்
எடுப்பு-முற்பட எடுப்பது; தொடுப்பு-எடுப்புக்கு ஏற்ப உடனே முடிப்புத் தருவது. வினா விடைப்பாடல்கள், விடுகதைப் பாடல்கள், மனக் கணக்குகள் என்பவனெல்லாம் எடுப்பு தொடுப்பு எனவும் கூறப்படும். “இன்னவாறு தொடங்கி இன்னவாறு முடிக்க வேண்டும்” என்றவாறு ஒருவரே எடுத்து முடிப்பதும் உண்டு. இரட்டையர்கள் எடுப்பு முடிப்பு, இருவரும் இணைந்தே செய்தவை. பொன்னுசாமித் தேவரும் முத்துராமலிங்க சேதுபதியும் வினாவிடை வெண்பா எடுப்பு முடிப்பாகப் பாடினார். காளமேகமோ கேட்டவாறெல்லாம் பாடினார்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்